'மாஜி' முதல்வர் பிறந்த நாள்; அ.தி.மு.க., ரத்த தானம் வழங்கல்

பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டையில் முன்னாள் முதல்வர் பழனிசாமி பிறந்த நாளையொட்டி முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் ரத்த தானம் வழங்கினார்.

முன்னாள் முதல்வர் பழனிசாமி பிறந்த நாளையொட்டி பரங்கிப்பேட்டையில் நேற்று கடலுார் கிழக்கு மாவட்ட மகளிரணி, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியன சார்பில் ரத்த தானம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடந்தது. முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் முருகுமாறன், முன்னாள் மாவட்ட சேர்மன் திருமாறன், மாவட்ட பொருளாளர் சுந்தர், மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், ஒன்றிய செயலாளர் ரங்கசாமி, பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் வசந்த் முன்னிலை வகித்தார். ஜெ., பேரவை சந்தர் ராமஜெயம் வரவேற்றார்.

பாண்டியன் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் குமார், மாவட்ட பாசறை செயலாளர் சண்முகம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தில்லை கோபி, கிள்ளை நகர செயலாளர் தமிழரசன், மாவட்ட மீனவரணி செயலாளர் வீராசாமி, நகர இளைஞரணி செயலாளர் ஜெய்சங்கர், கவுன்சிலர் ஜெயந்தி ஜெய்சங்கர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆனந்தஜோதி சுதாகர், ரவி, துணை செயலாளர் இக்பால், மாவட்ட பிரதிநிதி கார்த்திகேயன், நிர்வாகிகள் ரவி, சிவக்குமார், கருணாகரன், சக்கரவர்த்தி, கணேசன், பாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement