ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், : கட்டுமான பொருட்களின் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி திண்டுக்கல் கட்டட பொறியாளர் நலவாழ்வு சங்கம், கட்டட பொறியாளர்கள் சங்கத்தினர் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மணிக்கூண்டு அருகே நடந்த இதற்கு தமிழ்நாடு, புதுச்சேரி அனைத்து பொறியாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் மண்டல தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார். முன்னாள் மாநில தலைவர் ரவி முன்னிலை வகித்தார். மண்டல செயலாளர் டேவிட் பிராங்ளின், கட்டட பொறியாளர் நலவாழ்வு சங்க தலைவர்கள் அப்துல் சமது, தங்கதுரை, ராம்சுந்தர், காஜா பங்கேற்றனர்.

Advertisement