போலீஸ் செய்திகள்...
விபத்தில் கால் முறிவு
தேனி: ரோசனம்பட்டி அருகே ஆசாரிபட்டி நடுத்தெரு கண்ணன் 42. மாற்றுத்திறனாளி. இவர் நான்கு சக்கரங்கள் பொறுத்திய டூவீலரில்மார்க்கெட்டிங் பணியாற்றி வருகிறார். மதுரை தேனி மெயின் ரோட்டில் மே 10ல் சிட்கோ தொழிற்சாலை பிரிவு அருகே சென்றார். பின்னால் வந்த கார் டூவீலர் பின்புறமாக மோதிவிட்டு, நிற்காமல் சென்றது. இதில் மாற்றுத்திறனாளிகண்ணனின் கால் முறிந்து காயங்கள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்டவர் புகாரில், தேனி எஸ்.ஐ., முருகேசன் கார் ஓட்டிய நபர் மீது வழக்குப்பதிந்துவிசாரிக்கின்றார்.
பஸ் மீது ஆட்டோ மோதி 8 பேர் காயம்
தேனி: மதுராபுரி காளியம்மன் கோயில் தெரு அருண்குமார் 28. பெரியகுளம் ரோடு தனியார் பஸ் நிறுவனத்தின் டிரைவர். பெரியகுளம் மெயின் ரோடுபெட்ரோல் பங்க் அருகே மே 10ல் இரவு ஓட்டி வந்து, பங்கிற்கு செல்ல ரோட்டின் கிழக்குப் புறமாக பஸ்சை திருப்பினார். அப்போது அமல்ராஜ்தேனி நோக்கி வந்த ஆட்டோ, பஸ் மீது மோதியதில், ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் ஆட்டோவில் பயணித்த அருணாச்சலம்,பாக்கியலட்சுமி, சித்ரா, பிரித்திவிராஜன், மாரியம்மாள், வீரமணிகண்டன், சக்திவேல், ஆட்டோ டிரைவர் அமல்ராஜ் உட்பட 8 பேர் காயமடைந்தனர். அனைவரும்தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டனர். தேனி போலீசார் குறித்து விசாரிக்கின்றனர்
ஜவுளிக்கடை உரிமையாளருக்கு கத்திக்குத்து
தேனி: சுக்குவாடன்பட்டி மேற்குத்தெரு பாபு 43. ஜவுளிக்கடை உரிமையாளர். இவரது கடைக்கு டூவீலரில் கடந்த மே 9ல் மதியம் சென்று கொண்டிருந்தார்.அப்போது பாபுவின் டூவீலருக்கு பின்னால் சென்ற, சுக்குவாடன்பட்டி டிரைவர் செல்வபாண்டி ஓட்டிச் சென்ற ஆட்டோ, டூவீலரில் மோதி விபத்து நடந்தது.
இதில் பாதிக்கப்பட்ட பாபு, சத்தமிட்டு கடைக்கு சென்று அமர்ந்திருந்தார்.
அப்போது கடைக்கு முன் ஆட்டோவை நிறுத்திய டிரைவர் செல்வபாண்டி,ஆட்டோவில் இருந்த கத்தியை எடுத்து, பாபுவிடம் தகராறில் ஈடுபட்டார்.
பின் இடது கன்னத்தில் குத்தி காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தார். பாதிக்கப்பட்ட பாபு சிகிச்சையில் உள்ளார். அல்லிநகரம் எஸ்.ஐ., கண்ணன், ஆட்டோர் டிரைவர் செல்வபாண்டி மீது வழக்குப் பதிந்துவிசாரிக்கின்றனர்.
ஆட்டோ கார் விபத்து: இருவர் காயம்
தேனி: போடி மீனாட்சிபுரம் வேல்முருகன் 49. இவர் மே 11ல் தனது ஆட்டோவில் தேனிக்கு சென்றுவிட்டு மீண்டும் மீனாட்சிபுரம் திரும்பினார். கோடாங்கிபட்டி கனராவங்கி அருகே சென்றபோது, சென்னை ராமாபுரம் அம்மாள்நகர் பாலாஜி ஓட்டி வந்த கார், ஆட்டோ மீது மோதி விபத்து நடந்தது. இதில் ஆட்டோவில் பயணித்தவேல்முருகன், கார் டிரைவர் பாலாஜி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. வேல்முருகன் காயமடைந்து தேனி மருத்துவக்கல்லுாரி அனுமதிக்கப்பட்டார். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கிறார்.
டூவீலர் கார் விபத்தில் வாலிபர் பலி
தேனி: இடுக்கி மாவட்டம் பாம்புபாறை ரெகுநாத் 29. தேனி சகோதரர் ரோபின்குமாருடன் 29, டூவீலரில் வீரபாண்டி கவுமாரியம்மன் சித்திரை திருவிழாவிற்குவந்தனர்.
அப்போது திண்டுக்கல் பைபாஸ் ரோடு பண்ணை அருகே சின்னமனுார் கார்த்திக் 32, ஓட்டி வந்த கார் மோதி விபத்து நடந்தது. இதில் ரோபின்குமார்இடதுபுறமாகவும், ரெகுநாத் வலது புறமாக கீழே விழுந்தனர். கார் ரெகுநாத் தலையில் ஏறி, சம்பவ இடத்தில் தலை நசுங்கி உயிரிழந்தார். வீரபாண்டி போலீசார், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி பலி
கடமலைக்குண்டு: கோவில்பாறை விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் பவுன்த்தாய் 70, இவர் மகன் சந்திரசேகரின் தோட்டத்திற்கு தினமும் சென்று வருவார். சந்திரசேகர் தோட்டம் அருகே அவரது சித்தப்பா தோட்டமும் உள்ளது.
நேற்று முன் தினம் தோட்டத்துக்கு சென்ற பவுன்த்தாய் அவரது சித்தப்பா தோட்டத்தில் கிணற்றில் தவறி விழுந்து இறந்துள்ளார். இது குறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.
போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சந்திரசேகர் புகாரில் கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி; வீரர்களுடன் கலந்துரையாடல்!
-
அடுத்த கட்ட நடவடிக்கை; ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை!
-
பயங்கரவாதிகள் 3 பேர் பற்றி தகவல் தந்தால் ரூ.20 லட்சம் சன்மானம் அறிவிப்பு
-
ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 89 பேர் தற்கொலை; புள்ளி விவரம் தந்த ராமதாஸ்
-
சோபியானில் மீண்டும் துப்பாக்கிச்சத்தம்: லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி சுட்டுக் கொலை
-
வெள்ளியங்கிரி மலையில் 15 வயது சிறுவன் பலி; தரிசனம் முடிந்து கீழே இறங்கும்போது சோகம்