என்.ஆர்.காங்., வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் அமைச்சரிடம் மனு

புதுச்சேரி அகில இந்திய என்.ஆர்.காங்., மாநில வழக்கறிஞர் அணியின் முதல் செயற்குழு கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.

வழக்கறிஞர் அணி மாநில தலைவர் குமரன் தலைமை தாங்கினார். பொதுச் செயலளர் ஜீவா வரவேற்றார். மாநில துணைத் தலைவர் பக்தவச்சலம், மாநில பொதுச் செயலாளர் ஜெயபால், மாநில பொருளாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், புதியதாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள், புதிய நீதிபதிகள் நியமனங்கள், புதுச்சேரியில் பணிபுரியும் வழக்கறிகளுக்கு கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தமைக்கும், தமிழகத்தை போல புதுச்சேரி மாநிலத்தில் பணிபுரியும் வழக்கறிஞர்கள் பணி காலத்தில் இறக்க நேரிட்டால், அவருடைய குடும்பத்திற்கு சேமநல நிதியாக ரூபாய் 10 லட்சம் இழுப்பீட்டு தொகை கொடுப்பதற்கு புதிய சட்டத்தை உருவாக்கிய முதல்வர் ரங்கசாமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மதியம் முதல்வர் ரங்கசாமி, சட்டத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோரிடம் வழக்கறிஞர் அணி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இதில் மாநில செயலாளர்கள் விஜயகுமார், அன்பரசன், இணை செயலாளர்கள் நாகராணி, வில்லியம்ஸ், பொருளாளர் கோவிந்து திருநாவுக்கரசு, செயற்குழு உறுப்பினர் சிவகுமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Advertisement