வெடிகுண்டு ஒத்திகை நிகழ்ச்சி

புதுச்சேரி : புதுச்சேரி போத்தீஸ் துணிக்கடையில் வெடிகுண்டு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

புதுச்சேரியில் கவர்னர், முதல்வர், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு சமீப காலமாக வெடி குண்டு மிரட்டல் வருகிறது. இந்நிலையில் பெரியக்டை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இணைந்து வெடிகுண்டு ஒத்திகை நிகழ்ச்சியினை போத்தீஸ் துணிக்கடையில் நடத்தினர்.

அதில் போலீசார் வெடிகுண்டு மிரட்டல் வந்தால் ஒவ்வொரு ஊழியரும் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement