பாரதி வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் வியாபாரிகள் வாக்குவாதத்தால் பரபரப்பு

புதுச்சேரி: பாரதி வீதியில், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிய போது, நகராட்சி ஊழியர்கள், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி பாரதி வீதியில் விளம்பர போர்டுகள், கடைகள் உள்ளிட்ட பல வகையில், ஆக்கிரமிப்பு இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாமல், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

மேலும் அந்த பகுதியில், தனியாருக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.

அதையடுத்து, ஐகோர்ட் உத்தரவின்படி, நகராட்சி ஆணையர் கந்தசாமி முன்னிலையில், ஊழியர்கள் அந்த இடத்தை அதிரடியாக நேற்று அகற்றினர்.

அப்போது, அந்த இடத்தின் உரிமையாளருக்கும், நகராட்சி அதிகாரி மற்றும் ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற விடாமல் தடுத்தனர்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெரியக்கடை இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார், வாக்குவாதம் செய்தவர்களை தடுத்து அப்புறப்படுத்தினர். பின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாரபட்சம்



பாரதி வீதியில், அனைத்து ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

ஆனால், அப்பகுதியில் சாலையோரத்தில், ஆக்கிரமிப்பில் இருந்த காபி பார்களை, மட்டும் அதிகாரிகள் அகற்றாமல் சென்றது, வியாபாரிகளிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement