பைக் திருட்டு

நெட்டப்பாக்கம் : கம்பெனி எதிரில் நிறுத்திய பைக் மாயம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் மேட்டு காலனி பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் 23, தனியார் கம்பெனி ஊழியர். இவர் கடந்த 10ம் தேதி மதியம் 2.40 மணியளவில் தனக்கு சொந்தமான மோட்டர் சைக்கிளை, கரியமாணிக்கத்தில் இயங்கும் தனியார் கம்பெனி எதிரில் நிறுத்திவிட்டு பணிக்கு சென்றார்.

பின் பணி முடிந்து இரவு 10.45 மணிக்கு வெளியே வந்து பார்த்த போது அவரது மோட்டர் சைக்கிள் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் மடுகரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement