பயங்கரவாதிகள் 3 பேர் பற்றி தகவல் தந்தால் ரூ.20 லட்சம் சன்மானம் அறிவிப்பு

ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் 3 பேர் குறித்து தகவல் அளித்தால், ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என காஷ்மீர் போலீசார் அறிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். 2019 ம் ஆண்டு புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு நடந்த மிகக் கொடூரமான தாக்குதல் சம்பவமாகும். இந்த தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் 3 பேர் குறித்து தகவல் அளித்தால், ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என காஷ்மீர் போலீசார் அறிவித்துள்ளனர்.
தெற்கு காஷ்மீர் முழுவதும் பயங்கரவாதிகளின் புகைப்படங்களுடன் போலீசார் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் காஷ்மீர் ஒன்றுபட்டுள்ளதாகவும் சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகவல் அளிப்பவரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும், இந்த பயங்கரவாதிகள் மூன்று பேரின் ஓவியங்களை என்.ஐ.ஏ., வெளியிட்டுள்ளது. அவர்கள் அனைவரும் பாகிஸ்தானியர்கள். ஆசிப், சுலேமான் ஷா மற்றும் அபு தல்ஹா என்று பெயர்களை அதிகாரிகள் வெளியிட்டு உள்ளனர்.
வாசகர் கருத்து (1)
Arinyar Annamalai - Bangalorw,இந்தியா
13 மே,2025 - 13:49 Report Abuse

0
0
Reply
மேலும்
-
நீங்கள் தான் வெட்கி தலைகுனிய வேண்டும்: முதல்வருக்கு இ.பி.எஸ்., பதில்
-
கூடுதல் எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகள்: இந்தியா நடவடிக்கை
-
ஆந்திர மதுபான ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது: சிறப்பு புலனாய்வுக் குழு அதிரடி நடவடிக்கை
-
நமது ட்ரோன், ஏவுகணைகளால் தூக்கம் தொலைத்த பாக்.,: பிரதமர் மோடி
-
பணி அனுபவ சான்றிதழ் வழங்க ரூ 60 ஆயிரம் லஞ்சம்; கல்வி அலுவலர் கைது
-
மேயர் வேட்பாளர் உள்ளிட்ட 4 பேர் சுட்டுக்கொலை:மெக்சிகோவில் பதற்றம்
Advertisement
Advertisement