சோபியானில் மீண்டும் துப்பாக்கிச்சத்தம்: லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: சோபியானில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.
போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், பாகிஸ்தான் ஆக்கிமிரப்பு எல்லையில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கைகளை இந்திய ராணுவம் மேற்கொண்டு வருகிறது.
பஹல்காம் சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகள் தலைக்கு ரூ.20 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சோபியான் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
அப்போது மறைவிடம் ஒன்றில் பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். சுதாரித்துக் கொண்ட பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலில் இறங்கினர்.
இரு தரப்பிலும் நீடித்த துப்பாக்கிச் கண்டையின் முடிவில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். எஞ்சியவர்கள் தப்பியோடி விட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்
-
நீங்கள் தான் வெட்கி தலைகுனிய வேண்டும்: முதல்வருக்கு இ.பி.எஸ்., பதில்
-
கூடுதல் எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகள்: இந்தியா நடவடிக்கை
-
ஆந்திர மதுபான ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது: சிறப்பு புலனாய்வுக் குழு அதிரடி நடவடிக்கை
-
நமது ட்ரோன், ஏவுகணைகளால் தூக்கம் தொலைத்த பாக்.,: பிரதமர் மோடி
-
பணி அனுபவ சான்றிதழ் வழங்க ரூ 60 ஆயிரம் லஞ்சம்; கல்வி அலுவலர் கைது
-
மேயர் வேட்பாளர் உள்ளிட்ட 4 பேர் சுட்டுக்கொலை:மெக்சிகோவில் பதற்றம்