நாட்டரசன்கோட்டையில் வெண்பட்டு  உடுத்தி ஆற்றில் இறங்கிய பெருமாள் 

சிவகங்கை : நாட்டரசன்கோட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் சித்ராபவுர்ணமியை முன்னிட்டு நேற்று காலை 6:45 மணிக்கு வெள்ளிக்குதிரையில் பெருமாள் வெண்பட்டு உடுத்தி ஆற்றில் எழுந்தருளினார்.

சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட நாட்டரசன்கோட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் மே 10 அன்று அனுக்கை, வாஸ்து சாந்தியுடன் சித்ராபவுர்ணமி பிரமோத்ஸவ விழா துவங்கியது.

மே 11 அன்று காலை 8:00 மணிக்கு திருமஞ்சனம்,காலை 9:00 மணிக்கு காப்பு கட்டுதல், வெள்ளி கேடயத்தில் சுவாமி எழுந்தருளல் நடந்தது.

நேற்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு காலை 6:45 மணிக்கு வெள்ளி குதிரையில் வெண்பட்டு உடுத்தி வந்த பெருமாள் பூபாலன் பொட்டலில் ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். ஏராளமான பக்தர்கள் வெள்ளிகுதிரையில் வந்த பெருமாளை தரிசித்தனர்.

தேவஸ்தான கண்காணிப்பாளர் கணபதிராமன், கவுரவ கண்காணிப்பாளர் கருப்பையா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement