கொலையானவரை தேடி வந்த குடும்பத்தினர் மகிழ்ச்சி!
போத்தனூர் : கோவை, போத்தனூர் -- செட்டிபாளையம் சாலையில், பாதி கட்டப்பட்ட நிலையில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் வளாகம் உள்ளது. நேற்று முன்தினம் இங்கு, அழுகிய நிலையில் ஆண் சடலம் கைப்பற்றப்பட்டது.
போத்தனூர் சரக போலீஸ் உதவி கமிஷனர் கனகசபாபதி மேற்பார்வையில், ஐந்து தனிப்படைகள் அமைத்து, கொலையாளிகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, பிரேத பரிசோதனையில் சடலத்தின் வலது மார்பில், 'அபர்ணா' என ஆங்கிலத்திலும் (Abarna), இடது கையில் x 1, x1, MMVI எனவும் பச்சை குத்தப்பட்டுள்ளது தெரிந்துள்ளது.
இவரை குறித்து ஏதேனும் விபரம் தெரிந்தவர்கள் போத்தனூர் போலீஸ் ஸ்டேஷனில் (டி3) தெரிவிக்கலாம் அல்லது நேரில் வந்து விபரம் கூறலாம் என, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இப்படியும் ஒரு கூத்து!
கொலையானவர் குறித்து பத்திரிகை, டிவி.,களில் செய்தி வெளியானது. இதனைக் கண்ட சின்னியம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது, 24 வயது மகன் இரு மாதங்களுக்கு முன் காணாமல் போய்விட்டதாக கூறி, போத்தனூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு குடும்பத்துடன் வந்தார்.
இன்ஸ்பெக்டரிடம் விபரம் கூறியதும், அவர் கொலையானவரின் கையில் குத்தப்பட்டிருந்த பெயரை கூறியுள்ளார். அதைக்கேட்ட மணிகண்டன், அது தனது மகன் இல்லை என கூறி, மகனின் மொபைல்போன் நம்பரை கொடுத்துள்ளார்.
அந்த எண்ணை இன்ஸ்பெக்டர் தொடர்புகொண்டபோது, அந்நபர் உயிருடன் இருப்பது தெரிந்தது. இதையடுத்து, மணிகண்டன் குடும்பத்தினர் நிம்மதியாக புறப்பட்டுச் சென்றனர்.
மேலும்
-
சோபியானில் என்கவுன்டர்: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை
-
ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி; வீரர்களுடன் கலந்துரையாடல்!
-
அடுத்த கட்ட நடவடிக்கை; ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை!
-
பயங்கரவாதிகள் 3 பேர் பற்றி தகவல் தந்தால் ரூ.20 லட்சம் சன்மானம் அறிவிப்பு
-
ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 89 பேர் தற்கொலை; புள்ளி விவரம் தந்த ராமதாஸ்
-
சோபியானில் மீண்டும் துப்பாக்கிச்சத்தம்: லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி சுட்டுக் கொலை