வர்த்தகர் சங்க ஆண்டு விழா

திருக்கோவிலுார் ; மணலுார்பேட்டையில் தாலுகா அலுவலகம், தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என வர்த்தகர் சங்க ஆண்டு விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மணலுார்பேட்டை வர்த்தகர் சங்க 46ம் ஆண்டு விழா அங்குள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. கவுரவ தலைவர்கள் சண்முகம், கணேசன் முன்னிலை வகித்தனர். தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் அன்வர் பாஷா வரவேற்றார்.

சங்கத்தின் ஆண்டு வரவு, செலவு கணக்கை துணைத் தலைவர் சண்முகம் சமர்ப்பித்தார். துணைச் செயலாளர் சிவகுமார், இணைச் செயலாளர் முபாரக், தொகுதி செயலாளர் ஆதிமூலம், ஆலோசகர் சேகர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் வாழ்த்தி பேசினர்.

மறைந்த வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையனுக்கு அரசின் சார்பில் சென்னையில் மணி மண்டபம் அமைக்க வேண்டும். மணலுார்பேட்டையில் தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தீயணைப்பு நிலையங்கள் ஏற்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்க பொருளாளர் அண்ணாதுரை நன்றி கூறினார்.

Advertisement