புத்தேரி கோவிலில் நரசிம்மர் ஜெயந்தி பூஜை

திட்டக்குடி : புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் நரசிம்மர் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.

பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியையொட்டி, நேற்று முன்தினம் காலை மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

முன்மண்டபத்தில் உற்சவர் நரசிம்மர் சுவாமிக்கு புண்யாகவாசனம், விஷ்வசேஷனர் பூஜை, கலச ஆவாஹனம், ஸ்தபன திருமஞ்சனம், பாராயணம், நரசிம்ம அஷ்டோத்திரம், சாற்று முறை ஆகிய வைபவம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.

Advertisement