கள்ளக்குறிச்சியில் டி.ஆர்.ஓ.,விடம் மனு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் டி.ஆர்.ஓ., பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
கள்ளக்குறிச்சி தாலுகாவில் 4 குறுவட்டங்களுக்குட்பட்ட 93 வருவாய் கிராமங்கள் உள்ளன. இந்த குறுவட்டங்களில் டி.ஆர்.ஓ., ஜீவா தலைமையில் நேற்று ஜமாபந்தி துவங்கியது. இந்திலி குறுவட்டத்திற்குட்பட்ட கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் நேற்று பல்வேறு கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்தனர்.
இதில் பட்டா மாற்றம், வீட்டு மனைப்பட்டா, ரேஷன் கார்டு, உதவித்தொகை, நலவாரிய அட்டை, மருத்துவகாப்பீடு அட்டை, பிறப்பு மற்றும் இறப்பு சான்று உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டது. தாசில்தார் பசுபதி உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
தொடர்ந்து இன்று (13ம் தேதியும்) நடக்கிறது. மேலும் தியாகதுருகம் குறுவட்டத்திற்கு வரும், 14, 15 தேதியும், நாகலுார் குறுவட்டத்திற்கு வரும் 16, 19 மற்றும் 20 தேதியும், கள்ளக்குறிச்சி குறுவட்ட கிராமங்களுக்கு 21ம் தேதியும் ஜமாபந்தி நடக்கிறது.
மேலும்
-
சோபியானில் என்கவுன்டர்: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை
-
ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி; வீரர்களுடன் கலந்துரையாடல்!
-
அடுத்த கட்ட நடவடிக்கை; ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை!
-
பயங்கரவாதிகள் 3 பேர் பற்றி தகவல் தந்தால் ரூ.20 லட்சம் சன்மானம் அறிவிப்பு
-
ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 89 பேர் தற்கொலை; புள்ளி விவரம் தந்த ராமதாஸ்
-
சோபியானில் மீண்டும் துப்பாக்கிச்சத்தம்: லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி சுட்டுக் கொலை