பொறுப்பேற்பு

விருத்தாசலம்; விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி முதல்வராக முனியன் பொறுப்பேற்றார்.

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி முதல்வராக பணிபுரிந்த ராஜவேல், கடந்தாண்டு ஓய்வு பெற்றார். இவருக்கு பதிலாக பேராசிரியர் சுரேஷ்குமார் முதல்வராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.

இதையடுத்து, கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரி முதல்வர் முனியன், விருத்தாசலம் கல்லுாரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

Advertisement