பார்லி சிறப்புக் கூட்டம் தேவையில்லை; காங்கிரஸ் கோரிக்கைக்கு சரத்பவார் கடும் எதிர்ப்பு

புதுடில்லி: இந்தியா, பாகிஸ்தான் மோதல் குறித்து விவாதம் நடத்த பார்லிமென்ட் சிறப்புக் கூட்டம் நடத்த தேவையில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறி உள்ளார்.
பஹல்காம் சம்பத்தை அடுத்து பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கியபடி இயங்கும் பயங்கரவாதிகளின் நிலைகள் முற்றிலும் அழிக்கப்பட்டன. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒடுக்கும் பொருட்டு இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளும் கிடைத்தன. தற்போது இரு நாடுகள் இடையே போர் நிறுத்தம் அமலில் உள்ளது.
இந்தியா, பாக். மோதல் குறித்து விவாதிக்க பார்லிமென்ட் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க பார்லிமென்ட் சிறப்புக் கூட்டம் நடத்த தேவையில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறி உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டணி கட்சியின் தலைவரான சரத் பவர் இவ்வாறு கூறியிருப்பது, கூட்டணியில் ஒருமித்த கருத்து இல்லை என்பதை
வெளிப்படுத்துவதாக உள்ளது.
இது குறித்து சரத் பவர் மேலும் கூறியதாவது;
பார்லி. சிறப்புக் கூட்டத்தை கூட்டுவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். மிகவும் உணர்ச்சிகரமான, ரகசியம் பொதிந்த பிரச்னை. அப்படித்தான் இது போன்ற சில தருணங்களில் சில விஷயங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய அரசியலில் மூத்த தலைவர்களில் ஒருவரான சரத்பவார், மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.










மேலும்
-
பொள்ளாச்சி வழக்கில் தண்டனை அறிவிப்பு; தலைவர்கள் கருத்து!
-
அந்தமானில் தென்மேற்கு பருவமழை துவக்கம்; தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
-
கேரளாவுக்கு ரூ.9 கோடி உயர்ரக கஞ்சா கடத்தல்; ஏர்போர்ட்டில் சிக்கிய இருவர்!
-
சி.பி.எஸ்.இ. 12 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலம் 'டாப்'
-
வீண் விளம்பர நாடகம் நடத்தும் முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
சோபியானில் என்கவுன்டர்: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை