தங்கம் விலை நேற்று ரூ.2,360 சரிவு; இன்று சவரனுக்கு ரூ.120 உயர்வு!

சென்னை: சென்னையில் இன்று (மே 13) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120
அதிகரித்து 70,120 ரூபாய்க்கும், ஒரு கிராம் 8,765 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது. தமிழகத்தில் சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 9,045 ரூபாய்க்கும், சவரன் 72,360 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 110 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை தங்கம் சந்தைக்கு விடுமுறை. அன்று முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனை செய்யப்பட்டன. நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு 165 ரூபாய் குறைந்து, 8,880 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 1,320 ரூபாய் சரிவடைந்து, 71,040 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 109 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
திடீரென மாலையில் மீண்டும் தங்கம் விலை குறைந்தது. அதன்படி, தங்கம் கிராமுக்கு 130 ரூபாய் குறைந்து, 8,750 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 1,040 ரூபாய் சரிவடைந்து, 70,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில், இன்று (மே 13) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120
அதிகரித்து 70,120 ரூபாய்க்கும், ஒரு கிராம் 8,765 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில், இன்று சற்று உயர்வை கண்டு உள்ளது.


மேலும்
-
நீங்கள் தான் வெட்கி தலைகுனிய வேண்டும்: முதல்வருக்கு இ.பி.எஸ்., பதில்
-
கூடுதல் எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகள்: இந்தியா நடவடிக்கை
-
ஆந்திர மதுபான ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது: சிறப்பு புலனாய்வுக் குழு அதிரடி நடவடிக்கை
-
நமது ட்ரோன், ஏவுகணைகளால் தூக்கம் தொலைத்த பாக்.,: பிரதமர் மோடி
-
பணி அனுபவ சான்றிதழ் வழங்க ரூ 60 ஆயிரம் லஞ்சம்; கல்வி அலுவலர் கைது
-
மேயர் வேட்பாளர் உள்ளிட்ட 4 பேர் சுட்டுக்கொலை:மெக்சிகோவில் பதற்றம்