வெள்ளியங்கிரி மலையில் 15 வயது சிறுவன் பலி; தரிசனம் முடிந்து கீழே இறங்கும்போது சோகம்

கோவை: கோவையில் வெள்ளியங்கிரி மலை ஏறிய பின்னர், கீழே இறங்கும்போது சிறுவன் மயங்கி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு:
கோவை மாவட்டம் பூண்டி மேற்கு தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. 7 மலைகளை கடந்து, சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம்.
இந்த மலை ஏறுவது சிரமம் என்பதால் முதியவர்கள், உடல்நலம் பாதிப்பு உள்ளவர்கள் மலையேற வேண்டாம் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந் நிலையில் வெள்ளியங்கிரி மலை ஏற்றத்தின் போது சிறுவன் மயங்கி விழுந்த பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலியான சிறுவனின் பெயர் விஷ்வா. 15 வயதான இவர் பள்ளி மாணவர்.
தமது தந்தை முருகனுடன் அவர் வெள்ளியங்கிரி மலை சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் கீழே இறங்கி வந்து கொண்டிருந்த போது, 3வது மலையில் மயங்கி கீழே விழுந்து பலியானார்.
இதையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்
-
ராணுவ பட்ஜெட் 12 ஆண்டில் 2.6 மடங்கு உயர்வு!
-
அணு ஆயுதத்தை வைத்து இந்தியாவை மிரட்ட முடியாது: வெளியுறவு செயலர்
-
நீங்கள் தான் வெட்கி தலைகுனிய வேண்டும்: முதல்வருக்கு இ.பி.எஸ்., பதில்
-
கூடுதல் எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகள்: இந்தியா நடவடிக்கை
-
ஆந்திர மதுபான ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது: சிறப்பு புலனாய்வுக் குழு அதிரடி நடவடிக்கை
-
நமது ட்ரோன், ஏவுகணைகளால் தூக்கம் தொலைத்த பாக்.,: பிரதமர் மோடி