பிரிமியர் தொடர் அட்டவணை

புதுடில்லி: இந்தியா, பாகிஸ்தான் போர் பதட்டம் காரணமாக பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது அமைதி திரும்பிய நிலையில், மீண்டும் தொடரை நடத்த இந்திய கிரிக்கெட் போர்டு முடிவு செய்துள்ளது. 57 போட்டி முடிந்துள்ளன.
மீதமுள்ள 17 போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியானது. கடந்த மே 8ல் பாதியில் கைவிடப்பட்ட பஞ்சாப் (10.1 ஓவர், 122/1)-டில்லி மோதல், மே 24ல் மீண்டும் துவக்கத்தில் இருந்து முழுமையாக நடக்கும். சென்னை அணி தனது சொந்தமண்ணில் ராஜஸ்தானை சந்திக்க இருந்தது. இப்போட்டி டில்லிக்கு (மே 20) மாற்றப்பட்டது. தகுதிச்சுற்று 1, எலிமினேட்டர், தகுதிச்சுற்று 2, பைனல் நடக்கும் இடங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அட்டவணை
நாள் மோதும் அணிகள் இடம்
மே 17 பெங்களூரு-கோல்கட்டா பெங்களூரு
மே 18 ராஜஸ்தான்-பஞ்சாப் ஜெய்ப்பூர்*
மே 18 டில்லி-குஜராத் டில்லி
மே 19 லக்னோ-ஐதராபாத் லக்னோ
மே 20 சென்னை-ராஜஸ்தான் டில்லி
மே 21 மும்பை-டில்லி மும்பை
மே 22 குஜராத்-லக்னோ ஆமதாபாத்
மே 23 பெங்களூரு-ஐதராபாத் பெங்களூரு
மே 24 டில்லி-பஞ்சாப் ஜெய்ப்பூர்
மே 25 குஜராத்-சென்னை ஆமதாபாத்*
மே 25 கோல்கட்டா-ஐதராபாத் டில்லி
மே 26 மும்பை-பஞ்சாப் ஜெய்ப்பூர்
மே 27 லக்னோ-பெங்களூரு லக்னோ

மே 29 தகுதிச்சுற்று 1 ---
மே 30 எலிமினேட்டர் ----
ஜூன் 1 தகுதிச்சுற்று 2 ----
ஜூன் 3 பைனல் ----

* போட்டி மதியம் 3:30 மணிக்கு துவங்கும். மற்றவை இரவு 7:30 மணிக்கு ஆரம்பம்.

Advertisement