வீரபாண்டி சித்திரை திருவிழா நிறைவு இன்று மஞ்சள் நீராட்டு

தேனி : தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கோலாகலமாக நிறைவடைந்தது. சித்திரை திருவிழா மே 6ல் துவங்கியது. அம்மன் கோயில் வீட்டில் இருந்து ஊர்வலமாக கோயிலில் எழுந்தருளினார்.

தேர்திருவிழா மே 9 மாலை நடந்தது. நேற்று முன்தினம் தேர்நிலைக்கு வந்தது. திருவிழா நாட்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரினசம் செய்தனர். தேனி மட்டுமின்றி தென்தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் கேரள மாநிலம் இடுக்கி, மூணாறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர்.

பொழுது போக்கு ராட்டின மைதானங்களில் தினமும் இரவில் கூட்டம் களைகட்டியது. நேற்று ஆபரணப்பெட்டிக்கு சிறப்பு செய்யப்பட்டு சித்திரை திருவிழா நிறைவடைந்தது. இன்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் கவுமாரியம்மன் கோயில் வீட்டில் எழுந்தருள்கிறார்.

விழாவில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதலில் செய்திருந்தனர். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த போலீசார் பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement