பஸ் ஸ்டாண்டில் கால அட்டவணை இல்லை பயணிகள் தவிப்பு
திருவாடானை : திருவாடானை பஸ் ஸ்டாண்டில் அரசு, தனியார் பஸ்கள் ஏராளமாக இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் எந்த நேரத்தில் பஸ்ஸ்டாண்டிற்குள் வரும், எப்போது புறப்படும் என்பதை அறிய பஸ் கால அட்டவணை இல்லை. அட்டவணை இல்லாததால் பஸ் இயக்கப்படும் நேரம் தெரியாமல் பஸ் ஸ்டாண்டுகளில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கம் நிலை உள்ளது.
பயணிகள் கூறியதாவது: குறிப்பிட்ட பஸ் எப்போது வரும் என்று டைம் கீப்பரிடம், கடைகாரர்களிடம் விசாரிக்க வேண்டியதுள்ளது. கால அட்டவணை இருக்கும் பட்சத்தில் யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. பஸ் வரும் நேரம் தெரியாமல் மிகவும் சிரமமாக உள்ளது.
இரவு நேரத்தில் கடைசி பஸ்களுக்கு செல்ல விசாரிக்க கூட ஆட்கள் இல்லாமல் தவிக்கிறோம். பெண் பயணிகள் மற்றும் முதியவர்கள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர். ஆகவே பஸ்கள் வந்து சேரும் நேரம், புறப்படும் நேரம் குறித்து தெளிவான கால அட்டவணை அமைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
மேலும்
-
பல லட்சம் கோடி முதலீடு திரட்ட அமெரிக்க அதிபர் சவுதியில் முகாம்
-
ஆதம்பூர் தளம் அழிப்பு என்ற பாக்., பொய் பிரசாரம்... முறியடிப்பு! நேரில் சென்று வீரர்களை சந்தித்து மோடி நிரூபணம்
-
ராணுவ கிடங்கில் குண்டு வெடிப்பு; இந்தோனேஷியாவில் 13 பேர் பலி
-
எந்த பதவியையும் ஏற்க மாட்டேன்: தலைமை நீதிபதி
-
ஆயில் கிடங்கில் தீ: ரூ.30 கோடி எண்ணெய் நாசம்
-
தொழிற்சங்க கூட்டமைப்பு வேலை நிறுத்த விளக்க பிரசாரம்