சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவை இரவில் வெளியிட்ட கல்வித்துறை

புதுச்சேரி : அரசு பள்ளி மாணவர்கள் முதல்முறையாக பங்கேற்ற சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகளை இரவில் வெளியிட்டது, கல்வித்துறையின் பொறுப்பற்ற தனத்தை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.
புதுச்சேரி அரசு பள்ளிகள், கடந்த 2024-25ம் கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு மாற்றப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்தது.
இந்நிலையில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் முதல் முறையாக பொதுத் தேர்வு எழுதியுள்ளனர். இதனால், இத்தேர்வு முடிவுகளை பெற்றோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நேற்று காலை அடுத்தடுத்து பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் தனிப்பட்ட முறையில் தெரிந்து கொண்டனர். மாநிலத்தின் தேர்ச்சி சதவீத விபரத்தை தொகுத்து மாலை வெளியிடுவதாக கூறியது. நீண்ட இழுபறிக்கு பின், இந்திரா நகர் அரசு கல்லுாரி ஆண்டு விழா முடித்துவிட்டு வந்த முதல்வரை கொண்டு இரவு 7:40 மணிக்கு நடு ரோட்டில் வைத்து தேர்வு முடிவுகளை வெளியிட்டனர்.
பல்வேறு தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்த்த சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவை இரவில், அதுவும் நடு ரோட்டில் வைத்து வெளியிட்ட சம்பவம், கல்வித்துறையின் பொறுப்பற்ற செயலை, வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
மேலும்
-
ஆனைபள்ளத்தில் நிழற்குடை அமைக்க வலியுறுத்தல்
-
குப்பை கொட்டும் இடமாக மாறிய பூவாத்தம்மன் கோவில் குளம்
-
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; குண்ணம் சிறுபாலத்திற்கு தடுப்பு அவசியம்
-
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; குப்பை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசு
-
உடற்பயிற்சி கூடம் மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா?
-
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; வடிகால்வாய் இல்லாததால் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்