ஆனைபள்ளத்தில் நிழற்குடை அமைக்க வலியுறுத்தல்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் -- காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில், ஆனைபள்ளம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி, பயணியர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இங்கு, காஞ்சிபுரம், உத்திரமேரூர், திருத்தணி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் நின்று செல்கின்றன. இந்நிலையில், இப்பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை இல்லாமல் உள்ளது.

இதனால், பேருந்துக்காக, பயணியர் சாலையிலே நின்றவாறு காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. வெயில் மற்றும் மழை நேரங்களில் பேருந்துக்காக பயணியர் காத்திருக்கும்போது, மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

சில நேரங்களில் சாலையோரத்தில் பேருந்துக்கு காத்திருக்கும் பயணியர் மீது, வாகனங்கள் மோதி விபத்தும் ஏற்படுத்தும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

எனவே, ஆனைபள்ளம் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement