ஓசூரை விரும்பும் ஐ.டி., நிறுவனங்கள்'
ஓசூர், ஓசூர் தனியார் நட்சத்திர ஓட்டலில், தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், ஒற்றை சாளர முறை தொடர்பான விழிப்புணர்வு இரு நாள் பயிற்சி பட்டறையை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் நேற்று துவக்கி வைத்து பேசியதாவது:
சென்னை, ஓசூர், சேலம், கோவை, திருச்சி ஆகியவற்றை உள்ளடக்கி மத்திய அரசால் தமிழகத்திற்காக அறிவிக்கப்பட்ட விமான மற்றும் பாதுகாப்பு வழித்தடத்தில், ஓசூர் ஒரு முனையமாகும். கிருஷ்ணகிரி மாவட்டம், ஆட்டோமொபைல் மற்றும் விமான உதிரிபாகங்களை உற்பத்தி செய்வதில் அதிக ஆற்றலை கொண்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தொழில் ரீதியாக நம்பிக்கைக்குரிய மாவட்டமாக வளர்ந்து வருகிறது.
ஒகேனக்கல் குடிநீர் திட்டம், நகரத்தின் தேவையை மட்டுமல்ல, தொழில்துறை நோக்கத்திற்கான தேவையையும் பூர்த்தி செய்கிறது. ஓசூரில் தமிழக அரசு தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க திட்டம் வகுத்துள்ளது. பல ஐ.டி., நிறுவனங்கள் தங்கள் ஆரம்ப செயல்
பாடுகளுக்கு ஓசூரை விரும்புகின்றன.
இவ்வாறு, அவர் பேசினார்.
ஓசூர் சப்கலெக்டர் பிரியங்கா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், வேளாண்மை இணை இயக்குனர் பச்சையப்பன், தோட்டக்கலை இணை இயக்குனர் இந்திரா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் மகாதேவன், ஹோஸ்டியா சங்க தலைவர் மூர்த்தி, தாசில்தார் குணசிவா உட்பட பலர்
பங்கேற்றனர்.
மேலும்
-
போர் நிறுத்தம் வருமா? துருக்கியில் இன்று உக்ரைன்- ரஷ்யா நேரடி பேச்சுவார்த்தை!
-
ராணிப்பேட்டையில் பயங்கர சம்பவம்; ஒரே இரவில் 2 பெண்கள் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை
-
ஜம்மு காஷ்மீரில் என்கவுன்டர்; பயங்கரவாதிகளை வேட்டையாடும் ராணுவம்
-
சிப்காட்டில் பாய்லர் வெடித்து விபத்து; ரசாயன நீரால் மக்கள் அவதி!
-
மெக்சிகோவில் பஸ் - டிரக் மோதிய விபத்தில் 21 பேர் பலி
-
இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணம் ஒத்திவைப்பு; காரணம் இதுதான்!