இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணம் ஒத்திவைப்பு; காரணம் இதுதான்!

1


புதுடில்லி: தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி நிலையத்திற்கு செல்லும் பயணம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

நாசா எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் இணைந்து, 2025ல், 'ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4' என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப திட்டமிட்டு இருந்தது.



ஆக்ஸியம் மிஷன் 4 திட்டத்தின், பைலட்டாக இந்திய விமானப்படையில் அனுபவம் வாய்ந்த விமானியான சுபன்ஷு சுக்லா பணியாற்றுவார். இவர் மே 29ம் தேதி, அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் பெல்கான் ராக்கெட் மூலம் விண்வெளி செல்கிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


மே 29ம் தேதி இந்திய நேரப்படி, இரவு 10:33 மணிக்கு ஆக்ஸியம் மிஷன் 4 (ஆக்ஸ்-4) திட்டத்தின் படி, ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில் ஏவப்பட இருந்த நிலையில், தற்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.


இதனால், இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி நிலையத்திற்கு செல்லும் பயணம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் மீண்டும் வரும் ஜூன் 8ம் தேதி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement