ராணிப்பேட்டையில் பயங்கர சம்பவம்; ஒரே இரவில் 2 பெண்கள் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை

1

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே ஒரே இரவில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ராணிப்பேட்டையில், பாலுவுக்கும், கீழ்புதுப்பேட்டை புவனேஸ்வரிக்கும் அண்மையில் திருமணமானது. தற்போது புவனேஸ்வரி 8 மாதங்கள் கர்ப்பமாக உள்ளார். விஜய் என்பவருடன் ஏற்பட்ட தவறான பழக்கத்தால் பாலுவை பிரிந்த புவனேஸ்வரி கீழ்புதுப்பேட்டையில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார்.


மனைவி பிரிந்ததால் மன விரக்தியில் இருந்த பாலு மாமியார் பாரதி, விஜயின் தந்தை அண்ணாமலை, ராஜேஸ்வரி ஆகிய 3 பேரை ஒரே இரவில் கொலை செய்துள்ளார்.
ஒரே இரவில் 3 பேரையும் கொடூரமாக கொலை செய்த பாலுவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



கள்ளத்தொடர்பு பிரச்னை காரணமாக கணவர் வெறிச் செயலில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

Advertisement