சேலம் செந்தில் பப்ளிக் பள்ளி 10, பிளஸ் 2 தேர்வில் சாதனை
சேலம், சேலம் செந்தில் பப்ளிக் பள்ளி, 10 மற்றும் பிளஸ் 2 சி.பி.எஸ்.இ., தேர்வில், மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதில், பத்தாம் வகுப்பு மாணவர்கள் தரணேஷ், ஷீமா மெல்வினா ஆகியோர், 500க்கு, 494 மதிப்பெண் பெற்று, மாவட்டத்தில் முதலிடம் பிடித்தனர்.
மாணவர் நவீன் பிரபு, 493 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். மாணவி ஷ்ரவந்தி புனித், மாணவர் கைலாசநாதன் ஆகிய இருவரும், 492 மதிப்பெண் பெற்று, மூன்றாம் இடம் பிடித்தனர். இதேபோல், பிளஸ் 2 தேர்வில் மாணவி தியாதனசேகர், 494 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார். மாணவர்கள் நேத்ரா பாலாஜி, பிரசன்னா ஆகிய இருவரும், 493 மதிப்பெண் பெற்று, 2ம் இடம்; மாணவர் கிருஷ்ணா, மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்தனர்.
சாதனை படைத்த மாணவர்களை, செந்தில் குழும தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை கந்தசாமி, செயலாளர் தனசேகர், தாளாளர் தீப்தி தனசேகர், தலைமை நிர்வாக அதிகாரி சுந்தரேசன், முதன்மை முதல்வர் சீனிவாசன், முதல்வர் மனோகரன், துணை முதல்வர் நளினி, நிர்வாக அதிகாரி பிரவீன் குமார், தலைமை நிர்வாக அதிகாரி சதீஸ்குமார், கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் மெர்ஸிஜாய்ஸ்கமலம், கருணாம்பிகை, வைஜெயந்தி, கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் சவுந்தர்ராஜன், வினோத்குமார் ஆகியோர் பாராட்டினர்.
மேலும்
-
போர் நிறுத்தம் வருமா? துருக்கியில் இன்று உக்ரைன்- ரஷ்யா நேரடி பேச்சுவார்த்தை!
-
ராணிப்பேட்டையில் பயங்கர சம்பவம்; ஒரே இரவில் 2 பெண்கள் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை
-
ஜம்மு காஷ்மீரில் என்கவுன்டர்; பயங்கரவாதிகளை வேட்டையாடும் ராணுவம்
-
சிப்காட்டில் பாய்லர் வெடித்து விபத்து; ரசாயன நீரால் மக்கள் அவதி!
-
மெக்சிகோவில் பஸ் - டிரக் மோதிய விபத்தில் 21 பேர் பலி
-
இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணம் ஒத்திவைப்பு; காரணம் இதுதான்!