விபத்தில் மாணவர் பலி



தலைவாசல் :தலைவாசல், நல்லுாரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஷியாம், 20. இவர் பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டை அரசு கலைக்கல்லுாரியில், எம்.ஏ., தமிழ் முதலாண்டு படித்தார். விடுமுறை நாட்களில் மேளம் அடிக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, பெரம்பலுாருக்கு மேளம் அடிக்க சென்றுவிட்டு, உடும்பியம் வழியே,

'ஸ்பிளண்டர்' பைக்கில், ஹெல்மெட் அணியாமல் வந்துகொண்டிருந்தார். லத்துவாடி சோதனைச்சாவடியில் வந்தபோது, பைக் மீது, எதிரே வந்த, அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் துாக்கி வீசப்பட்ட தொழிலாளி ஷியாம், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். வீரகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement