கே.டி.எம்., பைக் திருடிய இளைஞர் கைது பல இடங்களில் கைவரிசை காட்டியது அம்பலம்

சேலம் :சேலம், கிச்சிப்பாளையம், புதுத்தெருவை சேர்ந்தவர் செல்வராணி, 48. இவரது மகன் செல்வகுமார், 2 லட்சம் ரூபாய் மதிப்பில், கே.டி.எம்., பைக் வைத்திருந்தார். கடந்த, 5 இரவு, வீடு அருகே பைக்கை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை காணவில்லை. இதுகுறித்து செல்வராணி புகார்படி, கிச்சிப்பாளையம் போலீசார் விசாரித்ததில், பைக் திருடியது, சேலம், கோவிந்தசாமி நகரை சேர்ந்த கவுதம், 24, என தெரிந்தது. அவரை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், பைக்கை மீட்டனர். தொடர்ந்து விசாரித்ததில், கவுதம், மாநகர போலீஸ் ஸ்டேஷன்களில், 10க்கும் மேற்பட்ட வாகனங்களை திருடிய வழக்குகள் நிலுவையில் இருப்பதும், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விலை உயர்ந்த பைக்குகளை திருடி வந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் 2 பேர்
சேலம், பழைய சூரமங்கலம் ராம் நகரை சேர்ந்தவர் ஆனந்த்ராஜ், 38. இவரது ஸ்பிளண்டர் பிளஸ் பைக், கடந்த, 12 இரவு, வீடு முன் நிறுத்தியிருந்த நிலையில் மாயமானது. அவர் புகார்படி, சூரமங்கலம் போலீசார், அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்த பின், குரங்குச்சாவடி, பெருமாள் மலை அடிவாரத்தை சேர்ந்த கண்ணன், 27, பழைய சூரமங்கலம் மாரியம்மன் கோவில் தெரு விக்னேஷ்வரன், 24, ஆகியோர் திருடியது தெரிந்தது. இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், பைக்கை மீட்டனர்.

Advertisement