ப.வேலுார் டவுன் பஞ்., கூட்டம் 28 தீர்மானம் நிறைவேற்றம்
ப.வேலுார் ;நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் டவுன் பஞ்.,ல், 18 வார்டுகள் உள்ளன. தி.மு.க., கவுன்சிலர் லட்சுமி தலைவராகவும், துணைத்தலைவராக ராஜாவும், செயல் அலுவலராக மூவேந்திர பாண்டியனும் உள்ளனர். கவுன்சிலர்கள் இடையே கருத்து வேறுபாடால், கடந்த, இரண்டு மாதமாக மன்ற கூட்டம் நடக்காமல் இருந்தது. இந்நிலையில், அதிருப்தி கவுன்சிலர்களிடம், செயல் அலுவலர் மூவேந்திர பாண்டியன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால், கவுன்சிலர்களிடையே உள்ள பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று மன்ற கூட்டம் நடந்தது.
இதில் தலைவர் லட்சுமி, துணைத்தலைவர் ராஜா உள்பட, 18 கவுன்சிலர்கள், செயல் அலுவலர் மூவேந்திர பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். அனைத்து வார்டுகளுக்கும் பாரபட்சமின்றி, கவுன்சிலர்கள் கேட்ட பணிகளை உடனடியாக செய்து தரப்படும் என, செயல் அலுவலர் மூவேந்திர பாண்டியன் அறிவித்தார்.
மேலும்
-
போர் நிறுத்தம் வருமா? துருக்கியில் இன்று உக்ரைன்- ரஷ்யா நேரடி பேச்சுவார்த்தை!
-
ராணிப்பேட்டையில் பயங்கர சம்பவம்; ஒரே இரவில் 2 பெண்கள் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை
-
ஜம்மு காஷ்மீரில் என்கவுன்டர்; பயங்கரவாதிகளை வேட்டையாடும் ராணுவம்
-
சிப்காட்டில் பாய்லர் வெடித்து விபத்து; ரசாயன நீரால் மக்கள் அவதி!
-
மெக்சிகோவில் பஸ் - டிரக் மோதிய விபத்தில் 21 பேர் பலி
-
இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணம் ஒத்திவைப்பு; காரணம் இதுதான்!