அகற்றிய இடத்தில் தொடரும் ஆக்கிரமிப்பு

அலங்காநல்லுார்; அலங்காநல்லுார் மெயின் ரோட்டில் அகற்றிய இடங்களில் மீண்டும் ஆக்கிரமிப்பு தொடர்வதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இங்குள்ள தனிச்சியம், கேட் கடை ரோடு மிகவும் குறுகலானது. இந்த ரோட்டில் நெடுஞ்சாலைத்துறையினர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ரோட்டோரத்தில் மரங்கள் இருக்கும் பகுதிவரை ஆக்கிரமிப்பு செய்வதாக கூறி, நன்கு வளர்ந்த வேம்பு உள்ளிட்ட மரங்களை வேருடன் அகற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மெயின் ரோட்டின் இருபுறமும் 40 ஆண்டுகளுக்கு முந்தைய வடிகால் மீது கட்டியுள்ள ஆக்கிரமிப்பு பில்லர்கள், கட்டடங்கள் அகற்றப்படவில்லை. தற்போது அதே இடத்தில் அதிகமாகவே ஆக்கிரமிப்பு தொடர்கிறது. பலரும் வடிகால், படிக்கட்டுகள் கட்டிக் கொண்டனர்.

ரோட்டோர வெள்ளைக் கோடு வரை இடையூறு செய்யும் ஆக்கிரமிப்பாளர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் நடமாட சிரமப்படுகின்றனர். ஆக்கிரமிப்புகள் தொடராமல் இருக்க நிரந்தர நடவடிக்கை தேவை என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement