துணை வேந்தர் தேடுதல் குழுவில் 'கவர்னர்' நீக்கம்
சென்னை:பல்கலை துணை வேந்தர் தேடுதல் குழுவில், 'கவர்னர் - வேந்தர்' என்ற சொல் நீக்கப்பட்ட சட்ட திருத்தம், அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
அண்ணா பல்கலை துணை வேந்தரை பரிந்துரைப்பதற்கான மூவர் அடங்கிய தேடுதல் குழுவில், அரசின் பிரதிநிதிகள் பங்கேற்பர். ஏற்கனவே பல்கலை சட்டத்தின்படி இடம்பெற்ற, 'வேந்தரான கவர்னர்' என்ற சொல் நீக்கப்பட்டு உள்ளது.
மேலும், வேந்தரின் பிரதிநிதி அல்லது ஒருங்கிணைப்பாளர் என்ற சொல்லுக்கு பதிலாக, வேந்தரின் பிரதிநிதி அல்லது உறுப்பினர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், 'கவர்னர் - வேந்தர்' என்ற சொல் நீக்கப்பட்டு, 'அரசு' என, மாற்றப்பட்டுஉள்ளது.
அதேபோல், மதுரை காமராஜ் பல்கலை, அண்ணாமலை பல்கலை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகளின் துணை வேந்தர் தேடுதல் குழுவிலும் மாற்றம் செய்யப்பட்டுஉள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போர் நிறுத்தம் வருமா? துருக்கியில் இன்று உக்ரைன்- ரஷ்யா நேரடி பேச்சுவார்த்தை!
-
ராணிப்பேட்டையில் பயங்கர சம்பவம்; ஒரே இரவில் 2 பெண்கள் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை
-
ஜம்மு காஷ்மீரில் என்கவுன்டர்; பயங்கரவாதிகளை வேட்டையாடும் ராணுவம்
-
சிப்காட்டில் பாய்லர் வெடித்து விபத்து; ரசாயன நீரால் மக்கள் அவதி!
-
மெக்சிகோவில் பஸ் - டிரக் மோதிய விபத்தில் 21 பேர் பலி
-
இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணம் ஒத்திவைப்பு; காரணம் இதுதான்!
Advertisement
Advertisement