பொள்ளாச்சி சம்பவம் கூடுதலாக 25 லட்சம்

சென்னை, மே 15-

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், குற்றவாளிகள் ஒன்பது பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து, கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்புஅளித்தது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, மொத்தமாக 85 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டது.


இத்தொகையுடன், பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும், கூடுதலாக தலா 25 லட்சம் ரூபாய் என, நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

Advertisement