வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு

வில்லியனுார்: அரியூர் வெங்கடேஸ்வரா கல்விக் குழுமத்தில் விளையாட்டுப் போட்டி மற்றும் 'ஏகன்-2025' என்ற தலைப்பில் கலை நிகழ்ச்சி் நடந்தது.வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் தலைவர் ராமச்சந்திரன் வழிகாட்டுதலின்படி விளையாட்டுப் போட்டியை குழுமத்தின் முதன்மை இயக்க அதிகாரி வித்யா விளையாட்டு அணிகளை அறிமுகம் செய்து துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து 'ஏகன்-2025' கலை நிகழ்ச்சி மூன்று நாட்கள் நடந்தது. கலை நிழ்ச்சியை நடிகர் சூரி, நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர், இணை நடன மாஸ்டர் இக்கியா பெரி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, கல்விக் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ராஜிவ் கிருஷ்ணா், மவுஸ்மி ராஜிவ்கிருஷ்ணா ஆகியோர் பரிசு மற்றும் சாம்பியன்ஷிப் கோப்பையை வழங்கினர். விழாவில் மருத்துவக் கல்லூரி இயக்குனர் ரத்தினசாமி, மருத்துவ கண்காணிப்பாளர் ஜோசப்ராஜ், பொதுமேலாளர் சவுந்தரராஜன், கல்வி குழுமத்தின் கல்லுாரி முதல்வர்கள் செந்தில்நாதன், மல்லிகாகண்ணன், பிரதீப்தேவநேயன், ஆனந்தவைரவேல், ஜெயராமன் ராஜாங்கம், ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை மருத்துவக் கல்லூரி சிறப்பு அதிகாரி ரமேஷ் மற்றும் துணை முதல்வர் வினோத் ஆகியோர் செய்தனர்.

Advertisement