அடமான வீட்டை ஏலத்தில் விற்ற வங்கியில் இடையூறு செய்த 3 பேர் மீது வழக்கு
தேனி:தேனியில் ரூ.84 லட்சம் வங்கி கடனுக்கு அடமானம் வைத்த வீட்டை ஏலம் விற்ற வங்கி உள்ளே நுழைந்து உடுக்கை அடித்து வாடிக்கையாளர்கள், ஊழியர்களுக்கு இடையூறு ஏற்படுத்திய கருவேல்நாயக்கன்பட்டி ஜெயபால், அதே பகுதியை சேர்ந்த ராமர், லட்சுமணன் மீது தேனி போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
தேனி கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்த ராமர், லட்சுமணன். இவர்கள் தேனி சிட்டி யூனியன் வங்கியில் ரூ.84 லட்சம் கடன் பெற்றிருந்தனர். இந்த கடனுக்காக, கருவேல்நாயக்கன்பட்டி சேர்ந்த ஜெயபால் தனது வீட்டை வங்கியில் அடமானம் வைத்தார். கடன் தொகையை சரிவர செலுத்தாததால் வங்கி முதன்மை மேலாளர் ராமசுப்பிரமணியன் 56, தேனி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், பணத்தை மீட்டுத்தரவும், வங்கிக்கு அடமானம் வைத்து சொத்தை வங்கி வசம் ஒப்படைக்க கோரி மனு தாக்கல் செய்தார். நீதிமன்றம் வங்கி வசம் சொத்தை ஒப்படைக்க உத்தரவிட்டது. 2024 ஆக. 31ல் நீதிமன்ற அலுவலர்கள் முன்னிலையில் சொத்தை வங்கி கையகப்படுத்தியது.
இதனை எதிர்த்து ராமர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். உயர்நீதிமன்றம் வீட்டின் உரிமையாளரின் உடமைகளை உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, அடமான சொத்தை பூட்டி சீல் வைக்க உத்தரவிட்டது. அதன்படி 2025 ஏப்.22ல் அடமான சொத்து பொது ஏலத்தில் விற்கப்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயபால் கடந்த ஏப்.28ல் வங்கியில் நுழைந்து தரையில் அமர்ந்து உடுக்கை அடித்து, வாடிக்கையாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினார். பின் வங்கி ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து வங்கி குறித்து அவதுாறாக பேசினார். அப்போது ராமர், லட்சுமணன் ஆகியோர் வங்கிக்கு வெளியே நின்று அவதுாறாக பேசினர். இதுகுறித்து முதன்மை மேலாளர் தேனி போலீசில் மே 13ல் புகார் அளித்தார். ஜெயபால், ராமர், லட்சுமணன் மீது எஸ்.ஐ., முருகேசன் வழக்குப் பதிந்துள்ளார்.
மேலும்
-
போர் நிறுத்தம் வருமா? துருக்கியில் இன்று உக்ரைன்- ரஷ்யா நேரடி பேச்சுவார்த்தை!
-
ராணிப்பேட்டையில் பயங்கர சம்பவம்; ஒரே இரவில் 2 பெண்கள் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை
-
ஜம்மு காஷ்மீரில் என்கவுன்டர்; பயங்கரவாதிகளை வேட்டையாடும் ராணுவம்
-
சிப்காட்டில் பாய்லர் வெடித்து விபத்து; ரசாயன நீரால் மக்கள் அவதி!
-
மெக்சிகோவில் பஸ் - டிரக் மோதிய விபத்தில் 21 பேர் பலி
-
இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணம் ஒத்திவைப்பு; காரணம் இதுதான்!