திண்டுக்கல் இன்ஜினியரிடம் ரூ.48 லட்சம் மோசடி ஒசூர் வாலிபர் கைது

திண்டுக்கல்:ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி திண்டுக்கல் இன்ஜினியரிடம் ரூ.48 லட்சம் மோசடி செய்த ஒசூர் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்தவர் வேளாங்கண்ணி 28. பெங்களூருவில் சாப்ட்வேர் இன்ஜினியராக உள்ளார். சில நாட்களுக்கு முன் இவரிடம் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட நபர் ஆன்லைனில் டிரேடிங் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார். தொடர்ந்து அவருக்கு முதலீட்டு பயிற்சியும் அளித்தார். பின் ஒரு லிங்கை அனுப்பி அதன் மூலம் வேளாங்கண்ணியை பணம் செலுத்து வைத்துள்ளனர். அதில் முதலீட்டு தொகை பெருகியிருந்தது. ஆசைப்பட்ட வேளாங்கண்ணியிடம் படிப்படியாக ரூ.48 லட்சம் வரை முதலீடு செய்ய வைத்தார்.

பணத்தை எடுக்க வேளாங்கண்ணி முயன்றபோது பணம் வரவில்லை. முதலீட்டு தொகை அதிகரித்தது போன்று வெறும் எண்களை மட்டும் காட்டி மோசடி செய்தது தெரியவந்தது. வேளாங்கண்ணி திண்டுக்கல் சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். ஏ.டி.எஸ்.பி., தெய்வம் தலைமையில் இன்ஸ்பெக்டர் விக்டோரியா லுார்துமேரி, எஸ்.ஐ., லாய்டு சிங் விசாரணை நடத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை சேர்ந்த குமரேசன் 29, வங்கிக் கணக்கில் பணம் சென்றது தெரியவந்தது. அவர் ஏற்கனவே வேறு ஒரு வழக்கில் கைதாகி கோவை சிறையில் உள்ளார். இதை தொடர்ந்து போலீசார் குமரேசனை நீதிமன்ற அனுமதி பேரில் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும் விசாரிக்கின்றனர்.

Advertisement