மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

கிருஷ்ணகிரி:திருப்பத்துாரில் சாலை விபத்தில் சிக்கி, மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள், தானமாக பெறப்பட்டன.

திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த அக்ரஹாரத்தை சேர்ந்தவர் ஜோதி, 42. மே 11ல் திருப்பத்துார் அருகே ஸ்கூட்டியில் சென்றபோது விபத்து ஏற்பட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் கடந்த, 12ல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜோதிக்கு, மூளைச்சாவு ஏற்பட்டது. அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க, ஜோதியின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து, அவரது கிட்னி மற்றும் கண்கள் தானமாக பெறப்பட்டன. உடல் உறுப்புகளை தானமாக பெறப்பட்ட ஜோதியின் உடலுக்கு, மருத்துவக்கல்லுாரி முதல்வர் பூவதி தலைமையில், மருத்துவமனை கண்காணிப்பாளர் சந்திரசேகரன் மற்றும் டாக்டர்கள், செவிலியர் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

Advertisement