கஞ்சா விற்றவர் கைது

திருவாடானை: திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலம் மேம்பாலத்திற்கு கீழ் கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தது.

திருவாடானை எஸ்.ஐ., சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஆர்.எஸ்.மங்கலம் அருகே தளக்கான்பச்சேரியை சேர்ந்த மணிகண்டன் 22, பையை சோதனை செய்த போது ஒன்றரை கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மணிகண்டனை கைது செய்த போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertisement