பாதுகாப்பு இல்லாத சின்னமனுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

சின்னமனூர்: சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ரூ.5 கோடியில் கட்டடம் கட்டியவர்கள் சுற்றுச்சுவர் கட்டாததால் பாதுகாப்பு இன்றி திறந்த வெளியாக உள்ளது.
தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சி துறை சார்பில் ஊராட்சி ஒன்றியங்களுக்கு புதிய அலுவலக கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி தேனி, சின்னமனூர், கம்பம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு புதிய அலுவலக கட்டடம் கட்டப்பட்டது. தற்போது உத்தமபாளையத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
ஆனால் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வந்துள்ள சின்னமனூர் ஒன்றிய அலுவலக புதிய கட்டடத்திற்கு சுற்றுச்சுவர் கட்ட வில்லை. அலுவலக கட்டடத்தின் மேற்கு பக்கம் குடியிருப்பு உள்ளது. தற்போது குடியிருப்பும், அலுவலக கட்டடமும் ஒரே வளாகத்தில் உள்ளது.
அருகில் வசிப்பவர் சுற்றுச்சுவர் எழுப்ப பல முறை கூறியும் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். முன்பக்கமும் பாதி சுற்றுச்சுவர் இடிந்த நிலையில் உள்ளது.
புதிய கட்டடம் கட்டுமான பணியில் ஏற்கெனவே இருந்த காம்பவுண்ட் சுவரை இடித்து விட்டு புதிதாக சுற்றுச்சுவர் கட்டாமல் சென்று விட்டனர். அதிகாரிகள் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
போர் நிறுத்தம் வருமா? துருக்கியில் இன்று உக்ரைன்- ரஷ்யா நேரடி பேச்சுவார்த்தை!
-
ராணிப்பேட்டையில் பயங்கர சம்பவம்; ஒரே இரவில் 2 பெண்கள் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை
-
ஜம்மு காஷ்மீரில் என்கவுன்டர்; பயங்கரவாதிகளை வேட்டையாடும் ராணுவம்
-
சிப்காட்டில் பாய்லர் வெடித்து விபத்து; ரசாயன நீரால் மக்கள் அவதி!
-
மெக்சிகோவில் பஸ் - டிரக் மோதிய விபத்தில் 21 பேர் பலி
-
இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணம் ஒத்திவைப்பு; காரணம் இதுதான்!