கொலை மிரட்டல்: மூவர் மீது வழக்கு

போடி: போடி அருகே விசுவாசபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அய்யம்மாள் 45. இவரது மகன் ஜெகதீசன். ராணுவ வீரர். விசுவாசபுரத்தில் நடந்த கோயில் திருவிழாவிற்கு ஜெகதீசன் வந்துள்ளார்.

அப்போது அம்மாபட்டியை சேர்ந்த குணா என்பவர் மது போதையில் பிரச்னை செய்துள்ளார். அய்யம்மாளின் 2 வது மகன் சரவணன் கண்டித்துள்ளார்.

ஆத்திரம் அடைந்த குணா. சரவணனை அடித்துள்ளார். விலக்கி விட வந்த ராணுவ வீரர் ஜெகதீசனை குணா, இவரது தந்தை ராஜபாண்டியன், தாயார் பரமேஸ்வரி மூவரும் சேர்ந்து தகாத வார்த்தையால் பேசி, கம்பால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அய்யம்மாள் புகாரில் போடி தாலுகா போலீசார் குணா, ராஜபாண்டியன், பரமேஸ்வரி மூவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement