ஊட்டி மலர் கண்காட்சி இன்று துவக்கம்!

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில், 127வது மலர் கண்காட்சியை இன்று (மே 15) முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். மலர் கண்காட்சியில், கண் கவரும் மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 127 வது மலர் கண்காட்சி துவங்கியது. வரும், 25ம் தேதி வரை மலர் கண்காட்சி நடக்கிறது. நட்பாண்டின் சிறப்பு அம்சமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கவரும் வகையில், 'ஜெர்மனியம், சைக்ளோபின், பால்சம், ஆர்னமெண்டல் கேல், ஓரியண்டல் லில்லி,பேன்சி, மெரி கோல்டு, ஜினியா, டெல் மூனியம்,' உட்பட, 275 வகையான விதைகள், செடிகள் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டு, மலர் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு பூங்காவில் பல்வேறு பகுதிகளில், 7.50 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டது.








விழாவில், நடப்பாண்டின் சிறப்பு அம்சமாக, சோழர் பரம்பரையின் பெருமை குறித்து விளக்கும் வகையில் ராஜராஜ சோழனின் அரண்மனை, கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணை, அன்னபறவை படகு போன்ற உருவங்கள், 2 லட்சம் மலர்களால் அமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் குழந்தைகளை கவரும் வகையில் தாவரவியல் பூங்கா முழுவதும் வண்ண விளக்குகள் மற்றும் தோரணங்களால் அழகுப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாசகர் கருத்து (1)
Nada Rajan - TIRUNELVELI,இந்தியா
15 மே,2025 - 16:35 Report Abuse

0
0
Reply
மேலும்
-
மே18ல் 101வது ராக்கெட்டை ஏவுகிறது இந்தியா; விளக்கினார் இஸ்ரோ தலைவர் நாராயணன்!
-
தே.ஜ., கூட்டணியில் தான் நீடிக்கிறோம்: ஓ.பி.எஸ்.,
-
'ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட்': நக்சல்களின் முதுகெலும்பை உடைத்த பாதுகாப்பு படையினர்
-
பிறந்தநாள் விழாவில் அசைவம் சாப்பிட்டவர் உயிரிழப்பு: புதுக்கோட்டை அருகே சோகம்
-
போக்சோ வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்க முன்னுரிமை : உச்சநீதிமன்றம் உத்தரவு
-
யு.பி.எஸ்.சி., தலைவராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அஜய்குமார் பதவியேற்பு
Advertisement
Advertisement