தே.ஜ., கூட்டணியில் தான் நீடிக்கிறோம்: ஓ.பி.எஸ்.,

17

சென்னை: '' இன்னும் தே.ஜ., கூட்டணியில் தான் நீடிக்கிறோம் , என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.


அ.தி.மு.க., பொதுச்செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, அக்கட்சியில் நீடிக்க முடியாத நிலைக்கு ஆளான பன்னீர்செல்வம், 'அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு' என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.அவருடன், முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், எம்.எல்.ஏ.,க்கள் மனோஜ் பாண்டியன், அய்யப்பன், ராஜ்யசபா எம்.பி., தர்மர் ஆகியோர் உள்ளனர். வரும் 2026 சட்டசபை தேர்தலுக்காக அ.தி.மு.க., உடன் பா.ஜ., கூட்டணி அமைத்து உள்ளது.


இந்நிலையில், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு மாவட்டச் செயலர்களுடன், சென்னையில் நேற்று பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார். இன்றும் ஆலோசனை நடந்தது.


இந்த கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பன்னீர்செல்வம் கூறியதாவது; நாங்கள் இன்னும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் நீடிக்கிறேம். கூட்டணியில் யார் இருக்கிறார்கள் என்பது பற்றி கவலையில்லை. விரைவில் மாவட்டம் வாரியாக ஆய்வு நடத்த உள்ளோம். சென்னை வந்த அமித்ஷா எங்களை சந்திக்காதது வருத்தமே. அ.தி.மு.க.,வுக்கு இரட்டை இலை சின்னம் தற்காலிகமானதே. ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்காலிகமாக தான் அந்த சின்னம் அ.தி.மு.க.,விற்கு கிடைத்தது. யார் விரும்பினாலும் விரும்பாவிாட்டாலும் எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement