பிறந்தநாள் விழாவில் அசைவம் சாப்பிட்டவர் உயிரிழப்பு: புதுக்கோட்டை அருகே சோகம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரது வீடு உள்ளது. அண்ணாமலைக்கு பிறந்தநாள் என்பதால், அசைவ விருந்துக்கு ஏற்பாடு செய்தார்.
பிறந்தநாள் விழாவிற்கு வந்திருந்தவர்களுக்கு அசைவு உணவு பரிமாறப்பட்டது. அசைவு உணவு சாப்பிட்டவர்களில் 26 பேருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது.இந்த பிறந்த நாள் விழாவில் உணவருந்திய கருப்பையா என்பவர் உயிரிழந்தார்.
பாதிக்கப்பட்ட 26 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து, வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement