ராமேஸ்வரம் கடல் பகுதியில் பறந்த ட்ரோன்: உளவுத்துறை விசாரணை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடல் எல்லைப் பகுதியில் 'ட்ரோன்' வட்டமடித்ததாக மீனவர்கள் கூறியதால் உளவுத்துறையினர் விசாரித்தனர்.

ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடற்கரையில் இருந்து 30 முதல் 40 கி.மீ.,ல் இலங்கை உள்ளது. பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று இலங்கை கச்சத்தீவு, தனுஷ்கோடி இடையே ராமேஸ்வரம் கடல் பகுதிக்குள் 'ட்ரோன்' வட்டமடித்ததாக அப்பகுதியில் மீன்பிடித்த மீனவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து மத்திய, மாநில உளவு போலீசார் விசாரித்தனர். இதில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் விளம்பரம் செய்வதற்காக இரண்டு ட்ரோன்கள் பறக்கவிடப்பட்டது தெரிய வந்துள்ளது.

Advertisement