அல்டிமேட் டேபிள் டென்னிஸ் எப்போது

புதுடில்லி: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் வரும் மே 31ல் துவங்குகிறது.

அனைத்து இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் 'அல்டிமேட்' டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதுவரை 5 சீசன் முடிந்துள்ளன. கோவா அணி அதிகபட்சமாக 2 முறை (2023, 2024) சாம்பியன் ஆனது. பால்கன்ஸ் (2017), டில்லி (2018), சென்னை (2019) அணிகள் தலா ஒரு முறை கோப்பை வென்றன.
இதன் 6வது சீசன் வரும் மே 31ல் ஆமதாபாத்தில் ஆரம்பமாகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், பைனல், அரையிறுதி உட்பட 23 போட்டிகள் நடக்கவுள்ளன. ஒவ்வொரு அணியும் தலா 5 போட்டியில் விளையாடும். இரண்டு ஆண்கள் ஒற்றையர், 2 பெண்கள் ஒற்றையர், ஒரு கலப்பு இரட்டையர் போட்டி நடத்தப்படும்.
மே 31ல் நடக்கும் முதல் போட்டியில் டில்லி, ஜெய்ப்பூர் அணிகள் மோதுகின்றன. அன்று நடக்கும் மற்றொரு போட்டியில், 'நடப்பு சாம்பியன்' கோவா, ஆமதாபாத் அணிகள் விளையாடுகின்றன. சென்னை அணி, தனது முதல் போட்டியில் (ஜூன் 2), அறிமுக கோல்கட்டா அணியை எதிர்கொள்கிறது. அரையிறுதி ஜூன் 13, 14ல் நடக்கின்றன. பைனல் ஜூன் 15ல் நடக்கவுள்ளது.

Advertisement