தந்தை இறந்ததால் மகன் தற்கொலை

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, கோவில்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார், கடந்த மாதம் வாகன விபத்தில் இறந்தார். அவரது மனைவி தனலட்சுமி. அவருக்கு, அரவிந்த், 23, சுரேந்திரன், 21, என, இரு மகன்கள் உள்ளனர்.

சொக்கனுாரில் உள்ள பெற்றோர் வீட்டில் தனலட்சுமி, மகன்களுடன் தங்கியுள்ளார். இந்நிலையில், அரவிந்த், கோவில்பாளையம் வீட்டில் நேற்று முன்தினம் இரவு தூங்க சென்றார். நேற்று காலையில், மொபைல்போனில் தொடர்பு கொண்ட போது, போன் எடுக்காததால் உறவினர்கள் கோவில்பாளையத்துக்கு சென்று பார்த்தபோது தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

கிணத்துக்கடவு போலீசார் கூறுகையில், தந்தை இறந்த துக்கத்தில் இருந்த மகன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது, என்றனர்.

Advertisement