சாதனை விளக்க பொதுக்கூட்டம்

வால்பாறை : வால்பாறையில், தி.மு.க., அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

வால்பாறை காந்திசிலை வளாகத்தில், தி.மு.க., அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, தி.மு.க., நகர செயலாளர் சுதாகர் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், தி.மு.க., ஆட்சியில், கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்த பல்வேறு திட்டங்கள் குறித்தும், அரசின் சாதனைகள் குறித்தும் கட்சி நிர்வாகிகள் விரிவாக பேசினர்.

மேலும், தலைமை கழக பேச்சாளர் இஸ்மாயில், கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் கதிர்வேல், அவைத்தலைவர் செல்லமுத்து, வால்பாறை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

Advertisement