போலீஸ் பாதுகாப்புடன் ரோடு போடும் பணி

கருமத்தம்பட்டி : கணியூர் ஊராட்சியில், ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள பெருமாள் கோவில் வீதி, மாரியம்மன் கோவில் வீதியில், கான்கிரீட் ரோடு போட, அங்குள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து, வருவாய்த்துறையினர் அளவீடு செய்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி, ரோடு போடும் பணி மேற்கொள்ள சூலுார் தாசில்தார் உத்தரவிட்டார். இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் ரோடும் போடும் பணி நடந்தது. எதிர்ப்பு தெரிவித்தவர்களுடன் அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, பணியை மேற்கொண்டனர்.

Advertisement