உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை அதிகரிக்கணும்: உக்ரைன் அதிபர் வலியுறுத்தல்

அல்பேனியா: ஐரோப்பிய தலைவர்களுடனான சந்திப்புகளில் ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்கவும், உக்ரைனுக்கான ராணுவ உதவியை அதிகரிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார்.
ரஷ்யாவும், உக்ரைனும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதல் நேரடி அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்த உள்ளன. ரஷ்ய அதிபர் புடின் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தார். இதனை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்றுக்கொண்டார். இருநாட்டு பிரதிநிதிகளும் நேரடி அமைதிப் பேச்சுவார்த்தைக்காக நேற்று துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் கூடினர்.
பாதுகாப்பு அமைச்சர் ருஸ்டெம் உமரோவ் தலைமையிலான உக்ரைன் தூதுக்குழு, அதிபரின் உதவியாளர் மெடின்ஸ்கி தலைமையிலான ரஷ்ய குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்தச் சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடந்தது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய தலைவர்களுடன் தொடர் சந்திப்புகளை நடத்தினார்.
பின்னர், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது: அமைதியை அடைவதற்கான முதல் படி போர் நிறுத்தம். ரஷ்யா மீதான சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும். ராணுவ ஆதரவை வலுப்படுத்துதல், உக்ரைனின் வான் பாதுகாப்பு, பாதுகாப்பு உற்பத்தி திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும். ரஷ்யா மீது அதிக பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும்
-
நுாறு நாள் வேலை திட்டத்தில் ரூ.75 கோடி முறைகேடு: குஜராத் அமைச்சர் மகன் கைது!
-
சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 13 பேர் கோவையில் கைது; உ.பி.,யில் 90 பேர் சிக்கினர்!
-
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை; சென்னை உயர்நீதிமன்றம்
-
கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதாக மோசடி: ரூ.79 லட்சத்தை இழந்த பெண்
-
உக்ரைனில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல்; பஸ்சில் பயணித்த 9 பேர் பலி!
-
போலீஸ் மீது அவதூறு பரப்புவதா?: திருநெல்வேலி எஸ்.பி., அலுவலகம் கண்டனம்