நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன

அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் வந்தபோது, எங்களை அழைக்காதது வருத்தம் அளிக்கிறது என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறி இருக்கிறார். அப்படி வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் தான் அவரும் இருக்கிறார். அதில் சந்தேகம் இல்லை.
தமிழகத்தில் நடக்கும் அமலாக்கத்துறை ரெய்டுக்கும், பா.ஜ.,வுக்கும் சம்பந்தம் கிடையாது. தவறு செய்ததற்கான உறுதியான தகவல் எதுவும் இல்லாமல், ரெய்டு போக மாட்டார்கள். பா.ஜ.,வுடன் நடிகர் விஜய் கூட்டணி அமைப்பது குறித்து, அவர் தான் முடிவெடுக்க வேண்டும்.

மக்களுக்கு எதிரான தி.மு.க., ஆட்சியை அகற்ற, எல்லாரும் ஓரணியில் இணைய வேண்டும் என்பது எங்கள் கருத்து. அதை ஏற்போர், கட்டாயம் ஓரணியில் இணைவர்.

எப்படியெல்லாம் தீர்ப்பு வழங்க வேண்டும் என நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன. அதற்குள் தான் நீதி வழங்க முடியும்.



- நயினார் நாகேந்திரன்
தலைவர், தமிழக பா.ஜ.,

Advertisement